டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது பொது முடக்கம்: பிரிட்டன் அரசு முடிவு

லண்டன்: பிரிட்டனில் வரும் 2ம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்து கொள்ள அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளது.

உலகின் பல நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸ், பிரிட்டனையும் விடவில்லை. அங்கு மார்ச் மாதம் முதல் தீவிரமாக பரவிய வைரஸ் தொற்று, ஜூனில் ஓரளவு கட்டுக்குள் வந்தது. ஆகையால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

ஆனால் கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் நவம்பர் 5ம் தேதி முதல் டிசம்பர் 2ம் தேதி வரை பொதுமுடக்கம் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தற்போது வைரஸ் தொற்று  கட்டுக்குள் வந்திருக்கிறது.

இதையடுத்து, டிசம்பர் 2ம் தேதியுடன் பொதுமுடக்கத்தை முடித்துக்கொள்ள அந்நாடு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று  தெரிகிறது.