கொரோனாவில் இருந்து பூரண குணம்: வீடு திரும்பினார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

லண்டன்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முழுமையாக குணமாகி தற்போது வீடு திரும்பி இருக்கிறார்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு 10 பத்து நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது. தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டு வீட்டில் இருந்தவாறே அலுவல் பணிகளை அவர் கவனித்து வந்தார்.

ஆனால் அவரது உடல்நிலை மோசமான காரணத்தால் லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதையடுத்து, அவரது உடல் நலத்தில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது. இந் நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பியுள்ளார்.