அண்ணா நினைவு நாள் : திமுக அதிமுக பிரமுகர்கள் ஒரே நாளில் மரணம்

சென்னை

றைந்த முதல்வர் அண்ணாதுரையின் நினைவு நாளை ஒட்டி திமுக நடத்திய ஊர்வலத்தில் ஒரு திமுக பிரமுகரும்,   அண்ணா திமுக நடத்திய ஊர்வலத்தின் ஒரு அதிமுக பிரமுகரும் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்றி, மறைந்த முன்னாள் முதல்வரும் திமுகவின் அமைப்பாளருமான அண்ணாத்துரையின் நினைவு தினம் ஆகும்.   அதையொட்டி திமுக மற்றும் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்துதல் அண்ணா சமாதியில் தனித்தனியாக நடைபெற்றது.

திமுக சார்பில் நடைபெற்ற மவுன ஊர்வலத்தில் ராயப்பேட்ட காஜா மொகிதீன் கலந்துக் கொண்டார்.   இவர் திமுக மாநில சிறுபான்மைப் பிரிவு துணைச்செயலாளரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் ஆவார்.   இவர் அஞ்சலிக் கூட்டம் முடிந்து சேப்பாக்கம் அருகே சாலையை கடக்கும் போது ஒரு இருசக்கர வாகனம் மோதியது.   தூக்கி வீசப்பட்ட காஜா அங்கேயே மரணம் அடைந்தார்.   அவர் மீது மோதிய வாகன ஓட்டியான கொருக்குப்பேட்டயை சேர்ந்த சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக சார்பில் காலை நடந்த அஞ்சலிக் கூட்டத்துக்கு வந்த ஸ்ரீதர் என்பவர் திடீரென சாலையில் நெஞ்சு வலியால் மயங்கி விழுந்தார்.    சென்னை ஓட்டேர் பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் வசிக்கும் இவர் தண்டையார்பேட்டை பணிமனையில் விபத்துப் பிரிவில் பணி செய்து வருகிறார்.  அதிமுக தொழிற்சங்கத்தில் உதவி செயலாளக்ரக உள்ளார்.    அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஸ்ரீதர் மயங்கி விழுந்த போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரு வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் அவர்கள் தலைவரின் நினைவு நாளில் ஒன்றாக மரணம் அடைந்தது தொண்டர்களிடேயே கடும் துயரத்தை உண்டாக்கி உள்ளது.