நானும் ராகுலும் வன்முறைக்கு நடுவிலேயே வளர்ந்தோம்: பிரியங்கா காந்தி உருக்கம்

புதுடெல்லி:

நானும் ராகுல் காந்தியும் வன்முறைக்கு நடுவிலேயே வளர்ந்தோம் என பிரியங்கா காந்தி உருக்கமாக தெரிவித்துள்ளார்.


பிரியங்கா காந்தியின் அரசியல் வருகை காங்கிரஸார் மத்தியில் பெரும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

ஆனாலும், அரசியலில் எப்போது பிரியங்கா ஈடுபடுவார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்தது.

குழந்தைகளை அருகிலிருந்து வளர்ப்பதற்காவே பிரியங்கா அரசியலுக்கு வரவில்லை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், கிழக்கு உத்தரப்பிரதேச பொறுப்பாளராக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சி நியமித்தது.

உத்தரப்பிரதேசத்தில் சோர்ந்து போயிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.

தேர்தல் பிரச்சாரத்திலும் மாநிலம் முழுவதும் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியை மீண்டும் அங்கு உயிர்த்தெழ செய்துள்ளார் பிரியங்கா காந்தி.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நானும் ராகுலும் வன்முறைக்கும் பல இழப்புகளுக்கும் நடுவிலே வளர்ந்தோம்.
அந்த சூழலை என் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பவில்லை.

அவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இருந்தது.
தற்போது அவர்கள் வளர்ந்துவிட்ட சூழலில், நான் அரசியலில் இருப்பதை என் குழந்தைகள் விரும்புகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.