இரு அணிகளும் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்

தூத்துக்குடி,

பிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தாலும், மனசுகள் இணையவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளரான மைத்ரேயன் கூறியிருந்தது ஆட்சியாளர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ஓபிஎஸ் ஆதரவாளரான பொன்னையன், இரு அணிகளும் இணைந்தே செயல்பட்டு வருவதாக கூறி உள்ளார்.

மைத்ரேயன் கேள்விக்கு, பதில் அளித்த  தம்பித்துரை, அது  அவரது தனிப்பட்ட கருத்து என்று கூறியிருந்த நிலையில், அது தனிப்பட்ட கருத்து அல்ல, தொண்டர்களின் கருத்து என்று மீண்டும் கூறி சர்ச்சையை பரபரப்பான நிலையிலேயே வைத்துள்ளார்.

அவரின் கருத்துக்கு அதிமுகவை சேர்ந்த பலர் வரவேற்றும், ஒருசிலர் எதிர்த்தும் கருத்து கூறி வரும் நிலையில், இன்று தூத்துக்குடியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ள வந்த ஓபிஎஸ் ஆதரவாள ரான பொன்னையன் கூறும்போது, இரு அணிகளும் மனதாலும், உள்ளத்தாலும் இணைந்தே செயல்படுகிறது என கூறி உள்ளார்.