வெளியானது ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் டிரைலர்…!

அறிமுக இயக்குநர் கே.ஆர். சந்துரு இயக்கத்தில் தீரஜ் மற்றும் பிரதைனி சர்வா நடிக்கும் திரில்லர் திரைப்படம் ‘போதை ஏறி புத்தி மாறி’ . இத்திரைப்படத்தினை ரைஸ் ஈஸ்ட் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்க, இசையமைப்பாளர் கே பி இசையமைத்துள்ளார்.

குறும் படங்கள் வாயிலாக தன் திறமைகளை வெளிப்படுத்தி வரும் தீரஜ், இந்த படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் ராதாரவி, சார்லி, சுவாமிநாதன், துஷாரா, ப்ராதாயினி, அஜய், மீரா மிதுன், மைம் கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தில் மொத்தம் 35 கதாபாத்திரங்கள் உள்ளன.

வரும் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் இப்படம் சீட்டின் நுனிக்கே வர வைக்கும் பல திடுக்கிடும் திருப்பங்களைக் கொண்ட ஒரு திரில்லர் படமாக இருக்கும் என கூடுகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: AR Chandru, Bothai eri budhi mari, Deeraj, trailer
-=-