புதிய சுதந்திர நாடாக உருவாகும் பூகன்வில்

ப்பூவா நியூ கினியா

ப்புவா நியூ  கினியாவின் ஓர் அங்கமான பூகன்வில் என்னும் தீவுக்கூட்டம் தனி நாடாக உருவாகிறது.

பப்புவா நியூ கினியா பல தீவுகளின் தொகுப்பு நாடாகும்.    இதில் ஒரு அங்கமான பூகன்வில் ஒரு மாகாணமாக உள்ளது.  இந்த தீவிகளில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர்.  இது சுமார் 10,000 சதுர கிமீ  பரப்பளவு உள்ளதாகும்.  இங்குப் பூர்வ குடிகள் வசித்து வருகின்றனர்.  கடந்த  18 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸைச் சேர்ந்த கடலொடி பூகன்வில் இந்த தீவுகளுக்கு முதன்முதலில் வந்ததால் அவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த தீவுக்கூட்டம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஜெர்மன் காலனியாதிக நாடாக இருந்த நியூ கினியில் இணைக்கப்பட்டது.    முதலாம் உலகப்போரில் ஆஸ்திரேலியா இத்தீவுக் கூட்டத்தை பிடித்தது.  அதன்பிறகு 1975 ஆம் வருடம் வரை இந்த தீவு ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.  இடையில் இரண்டாம் உலகப்போர் நேரத்தில் இத்தீவு ஜப்பான் கட்டுப்பாட்டில் சில காலம் இருந்து வந்தது.

கடந்த 1975 ஆம் வருடம் பப்புவா நியூ கினி சுதந்திரம் பெரும் முன்பே வடக்கு சாலமன் தீவுகள் குடியரசு என்னும் தனி நாட்டை உருவாக்கும் பிரகடனம் வெளியானது.  ஆயினும் ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியுஜிய்னியா ஆகிய இருநாடுகளும் இதற்கு அங்கீகாரம் அளிக்கவில்லை.  அதனால் இந்த பகுதி பப்புவா நியு கினியாவில் ஒரு மாகாணம் ஆனது.

அதன்பிறகும் இந்த தீவுக்கூட்டத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி போராட்டங்கள் எழுந்தன.  இதுகுறித்து நேற்று முன் தினம் முதல் வாக்குப்பதிவு நடந்து வருகிறது.  பல கட்டங்களாக நடைபெற உள்ள இந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில்  சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொள்ள உல்ளண்ட்.  இந்த வாக்கெடுப்பு வரும் டிசம்பர் 7 வரை நடைபெற உள்ளன.

தற்போதுள்ள நிலையில் பப்புவா நீயூ கினியாவில் இருந்து பிரிந்து தனி நாடாக விரும்புவதாகவே மக்கள் வாக்கெடுப்பு நடத்த உள்ளதாகத் தெரிகின்றது.   அப்படி வாக்கெடுப்பில் முடிவானால் இது உலகிலேயே மிகச் சிறிய நாடாக அமையும்.