டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய பீல்டர்கள் சொதப்பல்; இங்கிலாந்து 268 ரன்கள் குவிப்பு

bairstowxx1இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி மொஹாலியில் இன்று துவங்கியது. முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தது. உணவு இடைவேளைக்குள் ஹமீது, 9 ரன்கள், ரூட் 15 ரன்கள், குக் 27 ரன்கள், மொயீன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 29 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழந்து 92 ரன்கள் சேர்த்தது.

உணவு இடைவேளைக்கு பின், கொஞ்சம் நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு பேர்ஸ்டோவும் பட்லரும் கூடுதல் பொறுப்புடன் விளையாடினர். இங்கிலாந்து அணியின் ரன்ரேட்டை இந்திய பவுலர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பட்லர் 43 ரன்கள், பேர்ஸ்டோவ், 89 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். சொற்ப ரன்களில் இங்கிலாந்து அணி ஆட்டம் முடியவேண்டியது. ஆனால், இந்திய ஃபீல்டர்கள் தொடர் சொதப்பலால், முதல்நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது.

கார்ட்டூன் கேலரி