காங்கிரஸ் சார்பில் குத்துசண்டை வீரர் விஜேந்தர் சிங் டெல்லியில் போட்டி! காங்கிரசக்கு நன்றி

டெல்லி:

டெல்லியில் போட்டியிட வாய்ப்பளித்த காங்கிரஸ் கட்சி நன்றி தெரிவிப்பதாக பிரபல குத்துச்சண்டைவீரர் விஜேந்தர் சிங் கூறி உள்ளார்.

டெல்லியில், காங்கிரசுக்கும், ஆம்ஆத்மி கட்சிக்கும் இடையே  தேர்தல் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில், உடன்பாடு ஏற்படாததால், ஆம்ஆத்மி கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. அதுபோல காங்கிரஸ் கட்சி சார்பிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக டில்லியில் மும்முனை போட்டி நிலவி வருகிறது,.

காங்கிரஸ் கட்சி சார்பில், டெல்லியில் மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை  நேற்று அறிவித்திருந்தது. தற்போது 7 வது வேட்பாளராக பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு  டெல்லி தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜேந்தர்சிங்,  தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். குத்துச்சண்டை போட்டிகளில் 20 வருடங்களுக்கும் மேலான எனது பயணத்தில், எனது நாட்டை எப்போதும் பெருமைப்பட வைத்துள்ளேன். தற்போது, நாட்டு மக்களுக்கு எதாவது செய்ய வேண்டிய நேரம். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பளித்த காங்கிரஸூக்கு நன்றி தெரிவிக்க கடமைபட்டிருக்கிறேன்

மக்களுக்கு சேவை செய்வதற்கான பொறுப்பு எனக்கு காங்கிரஸ் கொடுத்துள்ளது என்று நான் மகிழ்ச்சியடை கிறேன். ஒரு ஓட்டுனரின் மகனாக, ஏழைகளின் நிலைமையை நான் புரிந்து கொள்கிறேன். நான் அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளவேன் என்று தெரிவித்து உள்ளார்.

டெல்லியில் வரும் மே.12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைய இன்னும் ஒரு நாளே உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

விஜேந்தர் சிங் இன்று அல்லது நாளை வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறத.