மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில், 2வது செஷனில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது.

முதல் நாள் ஆட்டநேர முடிவில் 36 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்திருந்த இந்தியா, இன்று இரண்டாவது நாளில் தொடர்ந்து ஆடியது. ஷப்மன் கில் 45 ரன்களை அடித்து கம்மின்ஸ் பந்தில் அவுட்டானார்.

சற்று பெரிய இன்னிங்ஸ் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட புஜாரா, வெறும் 17 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். கடந்தப் போட்டியில் சரியாக சோபிக்காத அனுமன் விஹாரி இந்தப் போட்டியிலும் 21 ரன்களுக்கே ஆட்டமிழந்தார்.

தற்போது கேப்டன் அஜின்கியா ரஹானே 47 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 29 ரன்களிலும் ஆடி வருகின்றனர். இவர்கள் இருவரும் சற்று பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டும். மேலும், இந்திய அணி இன்றைய நாள் முழுவதும் தாக்குப் பிடித்து பேட்டிங் செய்ய வேண்டும்.

அப்படி நடக்கும் பட்சத்தில், இந்திய அணி 300 ரன்களைத் தாண்டலாம் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு மூன்றாவது நாளில் நெருக்கடியை அதிகரிக்கலாம். ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் நாதன் லயன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.