கொரோனா அறிகுறியுடன் தப்பி ஓடிய சிறுவன் 

கொரோனா அறிகுறியுடன் தப்பி ஓடிய சிறுவன்

தண்டையார்பேட்டையிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தங்கியிருந்த சிறுவர்கள் மற்றும் மூன்று ஊழியர்கள் உள்பட 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட இந்த விடுதி தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த இல்லத்திலிருந்து கொரோனா பாதித்த சிறுவன் ஒருவன் நேற்று தப்பி ஓடியுள்ளான்.  இச்சிறுவன் முதல் தொற்று கண்டறியப்பட்ட சிறுவனின் நெருங்கிய நண்பனாம்.  எனவே இச்சிறுவனுக்கும் தொற்று தீவிரமாக இருக்க வாய்ப்புள்ளதாம்.

சிறுவனை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் தற்போது காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.  இந்த இல்லத்தில் மொத்தம் 81 குழந்தைகள் தங்கியிருந்த சூழலில் இந்த இல்லம் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட மையமாக மாற்றப்பட்டு மீதமுள்ள 46 சிறுவர்களும் நகரின் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் மையங்களுக்கு மாற்றப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்கள் அனைவருக்குமே தற்போது லேசான கொரோனா அறிகுறிகள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

– லெட்சுமி பிரியா