ஓரினச் சேர்க்கைக்கு மறுத்த டிக்டாக் பிரபல சிறுவன் கொலை: ஒருவர் கைது

ஓரினச் சேர்க்கைக்கு மறுத்ததால், டிக்டாக்கில் கலக்கிய சிறுவனின் தலையில் கல்லை போட்டு கொன்றதாக வாலிபர் ஒருவர் காவல்துறையிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

நெல்லை அருகே உள்ள தாழையூத்தை அடுத்த குறிச்சி குளத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி தளவாய் (வயது35). இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்தனமாரி, இளைய மகன் கொம்பையா. கொம்பையாவின் பெற்றோரும், உறவினர்களும் அங்கு திரண்டு வந்து கதறி அழுதனர். கொம்பையா செல்போனில் நண்பர்களுடன் சேர்ந்து டிக்டாக் பதிவு அடிக்கடி வெளியிடுவது வழக்கம். இதனால் அந்த பகுதியில் கொம்பையாவை தெரியாதவர்களே இல்லை என்ற அளவுக்கு அனைவரிடமும் அன்பாக பழகி வந்துள்ளான்.

இந்த நிலையில், சமீபத்தில் கொம்பையா கொலை செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கொலையாளியை கண்டறிந்து கைது செய்ய துணை காவல் ஆணையாளர் பொன்னரசு மேற்பார்வையில் ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை காவலர்கள் கொம்பையா கடைசியாக யாருடன் சேர்ந்து விளையாடினான் ? யாருடனாவது மோட்டார் சைக்கிளில் வெளியில் சென்றானா ? கடைசியாக பார்த்தது யார் ? என்று துருவி துருவி விசாரணை நடத்தினர். அதில் அதே பகுதியை சேர்ந்த அறுவடை எந்திர டிரைவர் மாயாண்டி என்ற வாலிபர் குடிபோதையில் கொம்பையாவுடன் பேசி, அவனை அழைத்து சென்றது தெரியவந்தது. உடனடியாக மாயாண்டியை பிடித்து சென்று, காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் கொம்பையாவை கொலை செய்ததை மாயாண்டி ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து காவலர்கள் மாயாண்டியை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மாயாண்டியிடம் இன்று காலை வரை விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், “கொம்பையா என்னிடம் அடிக்கடி செல்போன்களை வாங்கி விளையாடுவான். அது போல சம்பவத்தன்று எனது செல்போனில் விளையாடிய போது, குடிபோதையில் இருந்த எனக்கு சிறுவன் கொம்பையா மீது ஓரின சேரிக்கை ஆசை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கொம்பையாவிடம் செல்போன் ஆசையை தூண்டி தனியாக நான்கு வழிச்சாலை அருகே உள்ள மறைவிடத்துக்கு அழைத்து சென்றேன்.

அங்கு வைத்து சிறுவன் கொம்பையாவிடம் ஓரினச்சேரிக்கையில் ஈடுபட்டேன். அவன் எனக்கு ஒத்துழைக்காமல் எதிர்ப்பு தெரிவித்தான். இதனால் கொம்பையாவை தாக்கி வலுக்கட்டாயமாக ஈடுபட முயன்ற போது, அவன் மயக்கம் அடைந்தான். இதனால் வெளியே தெரிந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று அருகில் கிடந்த கல்லை எடுத்து அவனது தலையில் போட்டு கொலை செய்தேன். பின்னர் அவனது உடலை புதரில் மறைத்து போட்டு விட்டு ஒன்றும் தெரியாதது போல ஊருக்கு சென்றேன். அங்கு அனைவரும் கொம்பையாவை தேடிய போது நானும் அவர்களுடன் சேர்ந்து தேடுவது போல் நடித்தேன். ஆனால் போலீசார் என்னை பிடித்து விட்டார்கள்” இவ்வாறு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கார்ட்டூன் கேலரி