ட்விட்டரில் ட்ரெண்டாகும் #BoycottNetflix ; ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’ படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு….!

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் மேல் ஆகின்றன.

திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ரவிகாந்த் இயக்கத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி வெளியாகியுள்ள படம் ‘கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா’.

இப்படத்தில் இந்துக் கடவுளான கிருஷ்ணரையும், ராதாவையும் தவறாகச் சித்தரிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் இன்று காலை முதல் ‘#BoycottNetflix’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

அதேபோல் அனுஷ்கா சர்மா தயாரிப்பில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘புல்புல்’ திரைப்படத்துக்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதிலும் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்துவது போன்ற வசனம் இடம்பெற்றுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.