ராஜநாகம் முதல் தவளைகள் வரை..  உணவுக்காக வேட்டையாடும் சிறுவர்கள்…

ஊரடங்கால் நாடு முழுக்க உணவுப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது.

வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு, காடுகள் தான் உணவு அளித்து வருகின்றன.

ஊரடங்கால், முன்பு போல் வனப்பகுதிக்குள் செல்ல முடியவில்லை.

சில தினங்களுக்கு முன்பு காட்டுக்குள் சென்ற பழங்குடியினர் சிலருக்குக் காய்கறிகள் ஏதும் கிடைக்கவில்லை.

அந்த பகுதியில் ஊர்ந்து சென்ற ராஜநாகம் தான் கிடைத்தது.

வேறுவழி இல்லாமல் , ராஜநாகத்தை உணவுக்காக வேட்டையாடி, ஊருக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள், சமூக வலைத் தளங்களில் வரலாகப் பரவி வரும் நிலையில்-

பீகார் மாநிலம் ஜெகனாபாத் பகுதியில் இன்னொரு வீடியோ இப்போது, வைரல்.

அது என்ன வீடியோ தெரியுமா?

அங்குள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தில், உணவுப்பஞ்சம் காரணமாகச் சிறுவர்கள் தவளைகளைப் பிடித்துச் சாப்பிடும் வீடியோவே, அது.

நீர் நிரம்பிய ஒரு குட்டையில், துள்ளி விளையாடும் தவளைகளை,சில சிறுவர்கள்,லாவகமாகப் பிடித்து, அதனை உணவாகச் சாப்பிடும் அந்த வீடியோ,பீகார் மாநிலத்தில் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

– ஏழுமலை வெங்கடேசன்