வேளச்சேரி ரெயில் பாதையில் கல்லை போட்ட சிறுவர்கள் : விபத்து தவிர்ப்பு

சென்னை

சென்னை வேளச்சேரி அருகில் விளையாட்டாக சிமெண்ட் கற்களை சிறுவர்கள் போட்டதால் நடைபெற இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி – சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் மின்சார ரெயில் பறக்கும் ரெயில் என அழைக்கப்படுகிறது.   இந்த தடத்தில் தினமும் ஏராளமான ரெயில் சேவை நடைபெறுகிறது.   இந்த பகுதி மக்களுக்கு முக்கிய போக்குவரத்து பறக்கும் ரெயில் சேவை என  சொல்லலாம்.

இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு இந்த பறக்கும் ரெயில் வேளச்சேரி மற்றும் பெருங்குடி ரெயில் நிலையம் இடையில் செல்லும் போது ரெயில் அடியில் பயங்கர சத்த்ம் ஏற்பட்டது.   இதனால் ரெயிலின் ஓட்டுனர் உடனடியாக ரெயிலை நிறுத்தி கீழே சென்று பார்த்துள்ளார்.  அப்போது அங்கு சிமெண்ட் கற்கள் உடைந்து கிடந்தன.

இது குறித்து ரெயில் ஓட்டினர் வேளச்சேரி ரெயில் நிலைய அதிகாரிக்கு தகவல் அளித்து பயணத்தை தொடர்ந்தார்.   வேளச்சேரி ரெயில் நிலைய அதிகாரி தனது பணியாளர்களுடன் விரைந்து சென்று அங்கு பார்வை இட்டார்.   அங்கிருந்த தண்டவாளங்களில் சிமெண்ட் ஸ்லாப் கற்கள் வைக்கப்பட்டிருந்தது.

இதை ஒட்டி ரெயில்வே காவல்துறை ஆய்வாளர் ரோஜா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.  அந்த விசாரணையில் தண்டவாளம் அருகே உள்ள நீர் தேக்கத்தில் சிறுவர்கள் அன்று மாலை குளித்துக் கொண்டிருந்த போது விளையாட்டாக சிமிண்ட் ஸ்லாப் கற்கலை தண்டவாளத்தில் வைத்தது தெரிய வந்தது.   அந்த சிறுவர்களை காவல்துறை தேடி வருகிறது.