சிறுவர்கள் கடத்தலா? ஆந்திர போலீசார் சென்னையில் தேடுதல் வேட்டை!

ந்திராவில் சிறுவர்கள் அடிக்கடி கடத்தப்படுவது தொடர்கதையாகிறது.  மேலே உள்ள படத்தில் உள்ள சிறுவர்களும் கடத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

6 வயதுடைய சிவசாய் என்ற சிறுவன், கடந்த மாதம் 6ந்தேதி முதல் காணாமல் போனதாகவும், விகாஸ் என்ற 6 வயதுடைய சிறுவன் மார்ச் 3ந்தேதியில் இருந்து காணவில்லை என்றும், ஜெயஉல்லா என்ற 6 வயது சிறுவன் ஏப்ரல் 3ந்தேதி முதல் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த சிறுவர்கள் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்டுள்ளனர் . பிச்சை எடுக்க சென்னைக்கு அழைத்து வரப்பட்டனரா ?  என ஆந்திர போலீசார் சென்னையில் முகாமிட்டு தேடுதல் வேட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

சமூக விரோதிகளால் சிறுவர்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதன் காரணமாக முக்கிய வீதிகள், கோவில்கள் போன்ற இடங்களில் அவரகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக, காணாமல் போன சிறுவர்களின் புகைப்படங்களை அச்சிட்டு,  ஆந்திர காவல்துறை துண்டு பிரசரம் வெளியிட்டுள்ளது.  அதில், படத்தில் காணும் சிறுவர்களை குறித்து தகவல் தெரிந்தால்,  விளம்பரத்தில் உள்ள தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சிறுவர்கள் ஆந்திரால் இருந்து மற்ற மாநிலங்களுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்ற நோக்கில், தமிழகத்தில் தமிழில் விளம்பரம் வெளியிடப்பட்டு தேடப்பட்டு வருகிறது..