மருந்துகள் பட்டியலில் கொண்டு வரப்படும் மருத்துவக் கருவிகள்

டில்லி

ரத்த அழுத்த அளவுக் கருவிகள் உள்ளிட்ட பல மருத்துவக் கருவிகள் மருந்துகள் பட்டியலுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இரதத அழுத்தம்,  இரத்த சர்க்கரை, உடல் உஷ்ணம் ஆகியவைகளை அளக்கும் பல டிஜிட்டல் கருவிகள் தற்போது விற்பனையில் உள்ளன.   இந்தக் கருவிகளில் பல எவ்வித தர நிர்ணய அளவுகோலுக்குள் வராமல் உள்ளன.   அதே போல் சுவாசக் கருவியான நெபுலைசரும் தரம் மற்றும் விலைகான எவ்வித அளவும் இன்றி உள்ளன

தற்போது இந்தக் கருவிகளில் 23 கருவிகள் மட்டுமே தர நிர்ணயக் கட்டுப்பாட்டுக்குள் உள்ளன.   ஆகவே இந்த கருவிகளை தரமானதாகவும் சரியான விலையிலும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என பல மருத்துவ நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன.    அதை பரிசீலனை செய்த இந்திய மருந்துகள் தொழில்நுட்பக் கழகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, உடல் உஷ்ணம் ஆகியவைகளை அளக்கும் கருவிகளும், நெபுலைசர் போன்ற சுவாச மருத்துவ உபகரணங்களும் மருந்துகள் பட்டியலுக்குள் கொண்டு வரப்ப்பட உள்ளன.  இதன் மூலம் இவை அனைத்தும் சோதனைக்குட்பட்டவைகள் ஆக மாற்றப்பட உள்ளன.

அத்துடன் இந்த உபகரணங்களுக்கான தர நிர்ணயம் மற்றும் சரியான விலை நிர்ணயம் அமைப்பது குறித்து மருந்துகள் தொழில்நுட்ப கழகம் பரிசீலனை செய்து வருகிறது..   இவை நிர்ணயம் செய்த பிறகு இவை அனைத்தும் வரும் 2020 ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் மருந்துகள் பட்டியலின் கீழ் வரும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.