ஆட்டம் டிராவில் முடிந்தாலும் முதலிடத்தில் நிற்கிறது பார்சிலோனா அணி!

மேட்ரிட்: ஸ்பெயினில் நடைபெற்றுவரும் ‘லா லிகா’ கால்பந்து தொடரில், பார்சிலோனா – செல்டா டி விகோ கிளப் அணிகள் மோதிய ஆட்டம் வெற்றி தோல்வியின்றி, டிராவில் முடிவடைந்தது.

இரு அணிகளும் மோதிய லீக் போட்டியில், செல்டா டி விகோ கிளப் அணிக்கு, பெடோர் ஸ்மோலோவ் மற்றும் இயாகோ அஸ்பாஸ் ஆகியோர் தலா ஒரு கோடித்துக் கொடுக்க, பார்சிலோனா அணிக்கான 2 கோல்களையும் அடித்தவர் லூயிஸ் சாரஸ்.

இந்தப் போட்டி ‘டிரா’ ஆனாலும், இதுவரை ஆடிய 32 போட்டிகளின் முடிவில், 21 வெற்றிகள், 6 டிரா மற்றும் 5 தோல்விகள் என்று 69 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திற்கு முன்னேறியது பார்சிலோனா அணி.

மொத்தம் 68 புள்ளிகளைப் பெற்ற ரியல் மேட்ரிட் அணி, இரண்டாமிடத்தில் உள்ளது. ஆனால், அடுத்தடுத்தப் போட்டிகளில் நிலைமை மாறலாம் என்பதால், எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதை இப்போதைக்கு கூற இயலாத நிலையே ஏற்பட்டுள்ளது.

You may have missed