கப்பலில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி!

டெல்லி: இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (DRDO) சார்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக டிஆர்டிஓ தெரிவித்து உள்ளது.

உலகநாடுகளுக்கு சவால்விடும் வகையில் இந்தியா பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அதன்படி ஒருபகுதியாக டிஆர்டிஓ தயாரித்துள்ள   உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை இந்திய கடற்படை விண்ணில் ஏவி பரிசோதித்தது.

வங்காள விரிகுடா கடற்பகுதியில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் பிரதேசத்தில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணையின் கப்பலில் இருந்து  இன்று  செலுத்தி சோதனை செய்தது. இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ராண்விஜய் போர் கப்பலில்  இருந்து இந்த சோதனை காலை 9.25 மணியளவில் விண்ணில் ஏவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட இலக்கான 300 கி.மீ தூரத்தில் வங்காள விரிகுடாவில் உள்ள கார் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே  உள்ள அதன் இலக்கை  சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.