புவனேஸ்வர்:

இந்திய – ரஷ்ய இணைந்து உருவாக்கிய பிரம்மோஸ் ஏவுகணை கடந்த நவம்பரில் சுகோய் – ஜெட் விமானத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

தற்போது ஆயுட்காலத்தை நீட்டிக்கக்கூடிய சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து ஒடிசா மாநிலம் பாலசோர் சந்திப்பூர் ஒருங்கிணைந்த ஆய்வு மைய ஏவுதளத்திலிருந்து பிரம்மோஸ் ஏவுகணை ஏவப்பட்டது. இது வெற்றிகரமாக இலக்கை நோக்கி சென்று தாக்கியது.

இந்த வெற்றிக்கு காரணமான விஞ்ஞாணிகளுக்கு ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார்.