நியு சவுத் வேல்ஸ்,  ஆஸ்திரேலியா

ஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீ விபத்தில் சிக்கிய கோலா கரடியை ஒரு பெண் துணிச்சலாகத் தீயினுள் சென்று மிட்டுளார்.

 

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ பயங்கரமாக பரவி வருகிறது.  அந்தக் காட்டில் வசிக்கும் பல வன விலங்குகள் இந்த தீயில் சிக்கி உள்ளன.  இவற்றில் கோலா கரடிகளும் உள்ளன.  இந்த கோலா கரடி ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு ஆகும்.  பார்ப்பவர்களின் கண்ணைக் கவரும் வண்ணம் இந்த விலங்கு இருக்கும்.

தற்போது வேகமாகப் பரவி வரும் காட்டுத் தீவ்யி ஒரு கோலா கரச்டிக்க்ட்டி சிக்கி உள்ளது.  வேகமாக அது காட்டுச் சாலையைக் கடக்க முயன்ரும் தீயில் சிக்கி உள்ளது.   அப்போது அந்த வழியாக ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் சென்றுள்ளார்.   தீயில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் அந்த கரடிக்குட்டியை தோனி தோஹர்டி என்னும் பெயருள்ள அப்பெண் கண்டு மனம் பதைத்துள்ளார்.

அவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் தீயினுள் புகுந்து உள்ளே சென்று அந்த கரடியை மீட்டுத் தூக்கி வந்து அந்தன் மேலுள்ள தீயைத் தனது கோட்டை கழற்றிப் போர்த்தி அணைத்துள்ளார்.  அதன் பிறகு சாலைக்கு தூக்கி வந்து தண்ணீர் அளித்து முற்றிலுமாக தீயை அணைத்துள்ளார்.    முதலுதவி அளித்த பிறகு அந்த கரடியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளார்.  அந்த கரடி தற்போது சிகிச்சை பெற்று வருகிறது.

இந்நிகழ்வு விடியோ படமாக்கப்பட்டு சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.