புதுடெல்லி:
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்.‘
2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்ற அதிகாரிகளுடன்  பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
mode-ias
புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் முதல் மூன்று  மாதங்கள் மத்திய அரசின் துறைகளில் முக்கிய பணியாற்ற  வேண்டும் என்பது விதி. அதுபோல் 172 பேருக்கும் மத்திய அமைச்சகங்களில் முக்கிய பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவர்களிடம் பேசிய மோடி:  பயிற்சியின் போது நீங்கள் கற்றதை விட, உங்களது திறமை, கற்றதையும் வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.
வரும் மூன்று மாதங்களில், அதிகாரிகள் தங்கள் சுய முயற்சியை வளர்த்து கொள்ள வேண்டும். தாங்கள் செல்லும் துறைகளுடன் இணைத்து கொள்ள வேண்டும். சூழ்நிலையுடன் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருங்கள்.
மக்களுடன் இணைந்து பொறுப்புடன் பணியாற்றுங்கள். நிர்வாகத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள். மூத்த அதிகாரிகள் அதிகாரத்திற்கு அடிபணியாமல், நேர்மையாகவும் தைரியமாகவும் பணிபுரியுங்கள் என்று தெரிவித்தார்
அதை தொடர்ந்து கலந்துரையாடல் நடைபெற்றது.