பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டிவிட்டது.

உலக நாடுகளில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில் 3ம் இடத்தில் உள்ளது. அண்மையில் அந்நாட்டில் குறைந்திருந்த தொற்றுகளின் எண்ணிக்கை தற்போது மீண்டும் வேகம் எடுத்துள்ளது.

இந்நிலையில் இன்றைய நிலவரப்படி, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டிவிட்டதாக அந்நாட்டு சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,397 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. ஒரு நாளில் மட்டும் 552 பேர் பலியாகி உள்ளனர்.

இதையடுத்து, நாட்டில் கொரோனா பாதிப்பு 60 லட்சத்தை கடந்துள்ளது. கிட்டத்தட்ட 60,20,164 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டு மொத்த உயிரிழப்பு 1,68,613 ஆக இருக்கிறது. 54,22,102 பேர் குணமடைய  4,29,400 பேர் சிகிச்சையில் உள்ளனர்.