பிரேசிலியா

க்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ள கொரோனா தடுப்பூசி பிரேசில் நாட்டில் சோதிக்கப்பட உள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் பிரேசில் இரண்டாம் இடத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது.   இங்கு இதுவரை 5,84,562 பேர் பாதிக்கப்பட்டு அதில்32,568 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இங்கு தினசரி சுமார் 20000 பேர் பாதிக்கப்படுகின்றனர்.  தினசரி சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணம் அடைகின்றனர்.  இதைத் தடுக்க அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.

இதுவரை கொரோனாவை பரவலுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை.   உலக நாடுகள் அனைத்தும் இம்முயற்சியில் இறங்கி உள்ளன.  இதில் ஆக்ஸ்போர்ட் பலகலைக்கழகமும் அஸ்டிரா ஜெனிகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.  இந்த தடுப்பூசியைச் சோதனை செய்ய பிரேசில் நாட்டின் அன்விசா என்னும் சுகாதார அமைப்பு மற்றும் சவ் பவுலோவில் உள்ள ஃபெடரல் பல்கலைக்கழகம் முன் வந்துள்ளன.

இந்த சோதனைக்கு நேற்று முன் தினம் அன்விசா அனுமதி அளித்துள்ளது.   இந்த சோதனையில் சுமார் 2000 பேர் கலந்துக் கொள்ள உள்ளனர்.  தற்போதுள்ள நிலையில் கொரோனாவை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் நாடு உள்ளதாக இந்த சோதனை ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை முதல் கட்டமாகப் பிரேசிலின் மிகப் பெரிய மாகாணமான சவ் பவ்லோ என்னும் மாகாணத்தில் நடைபெற உள்ளது.  இங்கு சுமார் 1000 பேருக்குச் சோதனை நடத்தப்பட  உள்ளது.   இந்த சோதனை கொரோனா பாதிப்பு ஏற்பட அதிகம் வாய்ப்பு இருந்து இதுவரை பாதிக்காத நபர்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.