பிரேசிலியா:

பிரேசிலை சேர்ந்த மரைவால்டோ ஜோஸ் டா சில்வா (வயது 11) சிறுவன் வீட்டிற்கு வெளியே உள்ள ஏணியில் ஏறி விளையாடினான். அப்போது அங்கிருந்த ஒரு டிரம்மிப் எதிர்பாராத விதமாக சில்வா தவறி விழுந்தான். டிரம்மில் இருந்த இரும்பு கம்பி ஒன்று சில்வாவின் முதுகில் குத்தி மார்பை துளைத்து இதயத்தை ஊடுருவி வெளியே வந்தது.

இதில் அதிர்ஷ்டவசமாக சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை. எனினும் வலியால் துடித்த சில்வா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கம்பி சிறுவனின் உடலில் இருப்பதால் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் முதலில் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அறுவை சிகிச்சை மூலம் சிறுவனின் உடலில் இருந்து அந்த கம்பியை வெளியேற்றினர். தற்போது சிறுவன் நல்ல உடல் நலத்துடன் உள்ளான்.