பிரேசில் அதிபரின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று

--

பிரேசிலியா

பிரேசில் நாட்டு அதிபரின் செய்தி தொடர்பாளர் ஒடாவியோ டொ ரெகோ பரோஸ் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது.  அவ்வகையில் பிரேசில் நாட்டில் இதுவரை 1,26,611 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.  இதில் 8588 பேர் மரணமடைந்துள்ளனர்.  இதுவரை 51370 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 8318 பேர் கவலைக்கிடமான நிலையில்  உள்ளனர்.

பிரேசில் நாட்டு அதிபர் ஜைர் பொல்சொனாரோ ஆவார்.  இவருடைய செய்தி தொடர்பாளராக 59 வயதாகும் ஒடாவியோ டொ ரெகோ பரோஸ் பணி புரிந்து வருகிறார்.  இவருக்கு நடந்த கொரோனா பரிசோதனையில் தொற்று உள்ளது உறுதி ஆகி உள்ளது.

இதையொட்டி அவர் வீட்டிலேயே தனிமைப்ப்டுத்தபட்டுள்ளர்.  இவருக்கு கொரோனா அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை அவருடைய அலுவலக ஊழியரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுகள் இன்னும் வரவில்லை.

You may have missed