ரியோடிஜெனிரா: பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 24 லட்சம் பேரில், 16.3 லட்சத்துக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
பிரேசில் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது; பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 24,578 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 500க்கும் அதிகமானோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
பிரேசிலில் இதுவரை 24,19,091 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 87,004 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், கொரோனா பாதிப்புக்குள்ளான 16.3 லட்சத்துக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதாவது, 66.6% பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கையை விட, குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை சற்று உயர்ந்து வருவது ஆறுதல் அளிக்கும் வகையில் உள்ளது என்று பிரேசில் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.