பிரேசிலியா: பிரேசில் பிரதமரின் கோரிக்கையை ஏற்று கொரோனா தடுப்பூசியை அனுப்பிய மத்திய அரசுக்கு அந்நாடு அரசு நன்றி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு அஸ்ராஜெனெகா நிறுவனத்தின் தடுப்பூசிகள் கோவிஷீல்டு என்ற பெயரிலேயே தயாரிக்கப்படுகிறது. இந் நிலையில் முன்னுரிமை அடிப்படையில் 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை அனுப்பி வைக்க கோரி பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சனாரோ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதையடுத்து, 20 லட்சம் ஆக்ஸ்போர்டு அஸ்ட்ராஜெனெகா நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகளை பிரேசிலுக்கு அனுப்பி வைக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டது. பிரேசில் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவில் உள்ள பிரேசில் தூதரகம் மூலம் தொடர்பு கொண்டு தடுப்பூசியை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிலையில் கப்பல் மூலம் அனுப்பப்பட்ட தடுப்பூசிகள் இன்று பிரேசிலை சென்றடைந்தன. அதற்கு இந்தியாவிற்கான பிரேசில் தூதர் ஆண்ட்ரே அரன்ஹா கொரியா நன்றி தெரிவித்துள்ளார்.