பிரசிலியா:

ஓரின சேர்க்கை திருமணம் குற்றம் என சட்டம் இயற்ற ஆதரவாக பெரும்பான்மை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வாக்களித்தனர்.


1989-ம் ஆண்டு இன வெறி குற்றம் என பிரேசில் அறிவித்தது. இதன்படி, குற்றம் புரிந்தவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இந்நிலையில், பிரேசில் உச்ச நீதிமன்றத்தில் ஓரின சேர்க்கை திருமணம் இனவெறிக்கு சமம் என்றும், இதனை அனுமதித்தால் நாட்டின் நிர்வாகச் சீர்குலைவுக்கு வழி ஏற்படுத்திவிடும் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

இதனையடுத்து, ஓரின சேர்க்கை குற்றம் என்ற முடிவுக்கு ஆதரவாக 11 நீதிபதிகள் வாக்களித்தனர். 3 நீதிபதிகள் எதிர்த்து வாக்களித்தனர்.

ஓரின சேர்க்கை குற்றம் என்ற தீர்ப்பு பெருவாரியான நீதிபதிகளின் முடிவால் இறுதியானது.

ஓரின சேர்க்கை பாகுபாடு தொடர்பாக சட்டம் இயற்றும் வரை, ஓரின சேர்க்கை இனவெறி தடுப்புச் சட்டத்தின் கீழ் வரவேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நாம் வாழ்ந்து வரும் பாகுபாடான சமுதாயத்தில், ஓரின சேர்க்கை வேறாகவும், திருநங்கை பாலுறவு வேறாகவும் பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு முன்முடிவும் வன்முறையாகிறது. சில சமயங்களில் மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று நீதிபதி கார்மென் லூசியா கூறினார்.

எதிராக வாக்களித்த நீதிபதி ரிகார்டோ லெவன்டவுஸ்க்கி கூறும்போது, இனவெறிக்குட்பட்டு ஓரினச் சேர்க்கையை கொண்டு வருவதை எதிர்த்து வாக்களித்தேன். குற்றத்தின் தன்மையை வரையறுக்கவும், தண்டனை வழங்கவும் நாடாளுமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு என்றார்.

ஓரின திருமணம் பிரேசிலில் சட்டப்பூர்வமானதாக இருந்தது. கடந்த 2018-ம் ஆண்டு 420 ஓரின சேர்க்கையாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு மட்டும் இதுவரை 141 பேர் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

ஓரின சேர்க்கைக்கு தடை விதிக்கும் வகையில் இருந்த பிரிவை இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கி சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓரின சேர்க்கைக்கு தற்போது எவ்வித தடையும் இல்லை என்ற நிலை இந்தியாவில் உள்ளது.