பிரேசில் துணை ஜனாதிபதிக்கு கொரோனா

பிரேசில்:
பிரேசில் துணை ஜனாதிபதிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

பிரேசில் நாட்டின் துணை ஜனாதிபதி ஹேமில்டன் மாவ்ரோவிற்க்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
துணை ஜனாதிபதிக்கு நேற்று தொற்று உறுதியானவுடன், அவர் தன்னுடைய ஜனாதிபதி குடியிருப்பில் தனிமைப் படுத்தப்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே கொரோனா வைரஸால் மூன்றாவது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உள்ளது.
மேலும் பிரேசில் நாட்டு அதிபர் ஜெய்ர் பொல்சனரோ கடந்த ஜூலை மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.