ந்தியாவில் பருப்பு வகைகளுக்கு தொடர்ந்து தட்டுப்பாடு நிலவி வருகிறது.  இப்பிரச்சனையை களைய பிரேசில் நாடு மூலம் பருப்பு வகைகளை உற்பத்தி  செய்துகொள்ளும் புதிய வழிமுறையை மத்திய அரசு கையாளப்போவதாக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்திருக்கிறார்.
ramvilas
இதுதொடர்பாக பாட்னாவில் செய்தியாளர் களை சந்தித்த பாஸ்வான், பிரேசில்  இந்தியாவை விட இரண்டரை மடங்கு பெரிய நிலப்பரப்பைக் கொண்டுள்ள நாடு.  ஆனால் பருப்பு வகைகள் வெறும் 6 சதவீதம் மட்டுமே அங்கு உற்பத்தி  செய்யப்படுகிறது. எனவே, பிரேசிலில் இந்தியாவுக்கு பருப்பு வகைகளை உற்பத்தி  செய்வது தொடர்பாக அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இது  தொடர்பான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு மிடையே வரும் அக்டோபர் மாதம்  கையெழுத்தாக வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்தார். இதுபோன்றதொரு  ஒப்பந்தத்தை இந்தியா ஏற்கனவே மொசாம்பிக் நாட்டுடன்  செய்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பாஸ்வானின் இந்த முயற்சி பிரதமர் மோடி தமது தேர்தல்  பிரச்சாரத்தின்போது கூறிய உணவு உற்பத்தி குறித்த கருத்துகளுக்கு முரணாக  இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. அவர் சரியான உணவு சேமிப்பு முறைகளை கையாளாமல் போனதே பருப்பு வகைகளின் தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று அவர் முந்தய அரசைக் கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
பிரச்சனையின் மூல காரணத்தை ஆராய்ந்து அதை சரி செய்யாமல் வேற்று நாடு நமக்காக உணவு உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பது என்ன வகையான தீர்வு என்று விமர்ச்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.