பிரேசிலின் 200ஆண்டுகள் பழைய மியூசியத்தில் பயங்கர தீ விபத்து

 
ரியோ டி ஜெனீரோ:

200ஆண்டுகள் பழைமையான  பிரேசிலின் நேஷனல் மியூசியத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான கலைப்பொருட்கள் எரிந்து சாம்பலாயின. தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகிறார்கள்.

பிரேசில் நாட்டின் தலைநகர்  ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மிகவும் பழமையான அருங்காட்சியகம்  செயல்பட்டு வருகிறது. இது சுமார் 200 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. இந்த மியூசியத்தில் ஏராளமான கலைப்பொருட்கள், வரலாற்று சான்றுகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கலைப்பொருட்கள் உள்பட ஏராளமான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் இடம்பெற்றிருந்தது.

இந்த பழமையான அருங்காட்சியகத்தில் நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து  தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

இந்த தீ விபத்து காரணமாக பலகோடி ரூபாய்  மதிப்பிலான வரலாற்று பொக்கிஷங்கள் கருகிப்போயுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், காயமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

இந்த அருங்காட்சியகத்தின் பாழடைந்த நிலை மற்றும் அரசாங்கத்தின் நிதி குறைப்பு குறித்து ஊழியர்கள் தங்கள் கவலைகளை ஏற்கனவே தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பண்டைய காலத்தில் போர்ச்சுகீசிய அரச குடும்பத்தின் மாளிகையாக இருந்த இந்த அருங்காட்சிகத்தின் 200 ஆண்டு நிறைவு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.