பிரேசில் நாட்டு துணை ஜனாதிபதி ஹாமில்டன் மௌராவுக்கு கொரோனா தொற்று…!

பிரேசிலியா: பிரேசில் நாட்டு துணை ஜனாதிபதி ஹாமில்டன் மௌராவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது அவரது அலுவலகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தமது இல்லத்தில் அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்றும் சுகாதார அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ கடந்த ஜூலை மாதத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அப்போது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் பிரேசில் 3வது இடத்தில் இருக்கிறது. தற்போதுள்ள நிலவரப்படி, ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு 7,48,4,285 ஆகவும், பலி எண்ணிக்கை 1,91,139 ஆகவும் உள்ளது.