பங்களாதேஷில் விமான கடத்தல் முயற்சி முறியடிப்பு

டாக்கா:

பங்களாதேஷில் விமான கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

சிட்டகாங்கில் இருந்து டாக்கா வழியாக துபாய் செல்லவிருந்த விமானத்தை கடத்த முயற்சி செய்யப்பட்டது. விமானம் சிட்டகாங்கில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் தரையிறக்கப்பட்டனர்.

இருப்பினும் அங்கிருந்து விமான பணியாளர்களையும், விமானிகளையும் மர்மநபர் வெளியிடவில்லை.

பங்களாதேஷ் பிரதமர் ஹசினாவிடம் பேச வேண்டும் என்று இளைஞர் வலியுறுத்துவதாக தகவல் வெளியாகியது. இச்சம்பவத்தை அடுத்து சிட்டகாங்க் விமான நிலையம் மூடப்பட்டு, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ஒரே ஒரு ஆயுதம் தாங்கிய நபர் தான் விமானத்தை கடத்த முயற்சி செய்துள்ளார், அவர் தன்னிடம் தற்கொலை வெடிகுண்டு உள்ளது என்று மிரட்டினார் என செய்தி வெளியாகியது.

இந்நிலையில் பாதுகாப்பு படையினர் அதிரடியாக விமானத்திற்குள் புகுந்து இளைஞரை கைது செய்தனர். அங்கிருந்த விமானிகள், பணியாளர்களை காப்பாற்றினர். கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.