தோஹா:

லெபனான், பக்ரைன், ஈராக், ஜோர்டான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் ‘கஃபாலா சிஸ்டம் என்ற நடைமுறை உள்ளது. இதன் கட்டுமானம் உள்ளிட்ட சில துறைகளில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களை கண்காணிக்கும் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இது நவீன கொத்தடிமை முறை என தொழிற்சங்கங்களால் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த முறையை மாற்றி அமைக்க கத்தார் அரசு முன் வந்துள்ளது.

இது குறித்து சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சரன் பரோவ் ‘‘நவீன கொத்தடிமை தொழிலாளர்களை ஒழிக்கும் வகையில் கத்தார் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச அளவிலான தொழிலாளர் உரிமைகளை நிலைநாட்ட கத்தார் நல்ல வழியில் பயணிக்க தொடங்கியுள்ளது. இதன் மூலம் தொழிற்சாலைகளில் பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உறுதிபடுத்தப்படும்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இந்த தொடக்கத்திற்கு கூட்டமைப்பின் ஆதரவு உண்டு. இந்த திட்ட செயல்பாட்டை நடைமுறைபடுத்த தொழில்நுடப் வல்லுனர்களை கொண்டு சர்வதேச சட்ட கடமைகள் அமைப்பு உதவி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்த வேண்டியுள்ளது.

எனினும் இந்த முதல் கட்ட நடவடிக்கை எனுப்த வெளிநாட்டு தொழிலாளர்கள் மரியாதையாக நடத்துவததற்கும், அவர்கது உயிர் மற்றும் வாழ்வாதாரங்களுக்கு பாதுகாப்பை அளிக்கும். தொழிற்சாலை சார்ந்த நடைமுறையை நவீனப்படுத்த ஒப்புக் கொண்ட கத்தார் அரசு மற்றும் எமிருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது’’ என்றார்.

இந்த புதிய திட்டத்திற்கு கத்தார் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்தும். ஏற்கனவே அமலில் உள்ள ‘கஃபலா சிஸ்டம்’ முறையை கத்தார் அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. நவீன கொத்தடிமை முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச தொழிற்சங்க கூட்டமைப்பு கத்தார் அரசை பலமுறை வலியுறுத்தி வந்தது.

2022ம் ஆண்டு ஃபிஃபா உலக கோப்பை போட்டிக்கு முன்பு தொழிலாளர்களுக்கு உரிமை என்ற உலக கோப்பையை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. குறைந்த பட்சம் ஊதியும், வெளியேறும் அனுமதியை ரத்து செய்தல், ஊதிய முரண்பாடு, தொழிலாளர்களின் கோரிக்கையை தெரிவிக்க வாய்ப்பு, குறைகளை தீர்க்க தீர்ப்பாயம் போன்றவை கோரிக்கைகளாக முன் வைக்கப்பட்டது.