மூச்சுத்திணறல்: அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை:
திடீர் மூச்சுத்திணறல் காரணமாக தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடந்த மாதம் 18ம் தேதி மூச்சுத்திணறல் காரணமாக   ஏற்பட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், தொற்று இல்லை என முடிவுகள் வந்தது. இதையடுத்து வீடு திரும்பியவர் கடந்த வாரம் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில்  இன்று மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.