கலந்துகட்டி புகழ்ந்து தள்ளும் பிரட் லீ – யாரை..?

மெல்பர்ன்: சாதனை வீரர் லாரா என்றும், தன்னைப் பொறுத்தவரை சிறந்த வீரர் சச்சினே என்றும், முழுமையான கிரிக்கெட் வீரர் என்றால் அது காலிஸ்தான் என்றும் கலந்துகட்டி புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பந்து வீச்சாளர் பிரட் லீ.

அவர் கூறியதாவது, “டெண்டுல்கரைப் பற்றி கூறினால், அவருக்கு மட்டும் என் பந்துகளை ஆடுவதற்கு அதிக நேரம் கிடைப்பதாக உணர்வேன். என் பந்துகளை அவர் அனாயசமாக ஆடுவதைப் பார்க்கையில் இதை உணர்ந்துள்ளேன்.

லாரா ஒரு சுறுசுறுப்பான வீரர். பந்தை எப்படி வீசினாலும், அதை மைதானத்தின் 6 வேறுபட்ட இடங்களுக்கு அனுப்புவதில் அவர் வல்லவர். கிரிக்கெட்டில் 4 சதங்களை அடித்த ஒரே வீரராக ஜொலிக்கிறார்.

சச்சின் – லாரா இடையே சரிசமமான போட்டி என்றாலும்கூட, என்னைப் பொறுத்தவரை சச்சின்தான் பெஸ்ட். அவரின் 100 சதங்கள் என்ற சாதனை சாதாரணமானதல்ல!

அதேசமயம், எனது பார்வையில் முழுமையடைந்த வீரர் என்றால் அது காலிஸ்தான். அவர் மொத்தமாக 25534 ரன்களை எடுத்துள்ளதோடு, தன் பங்கிற்கு 577 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்” என்றார் பிரட் லீ.