லண்டன்:

பிரெக்ஸிட் ஒப்பந்தம் விவகாரத்தில் எம்.பி.க்களின் ஒப்புதலை பெற முடியாத நிலையில்,  ஜூன் 7ந்தேதி பதவி விலகப்போவதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவித்து உள்ளார்.

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமராக இனியும் நீடிக்கப்போவதில்லை என தெரேசா மே அறிவித்துள்ளார். கன்சர்வேடிவ் தலைவர் என்ற முறையில் ஒரு புதிய பிரதம மந்திரி முடிவு செய்ய  மே 7ம் தேதி ஒரு போட்டியை நடத்துவதற்கு வழி வகுத்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை தனத  பிரதமர் இல்லத்தின் முன்பு சந்தித்த தெரசா மே, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாதது  இன்று மட்டுமல்ல என்றுமே என் மனதில் நீங்கா கவலையாக இருக்கிறது. இதன் காரணமாக,  பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமராக தெரேசா மே இனியும் நீடிக்கப்போவதில்லை. கன்சர்வேட்டிவ் மற்றும் யூனியன் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் வருகிற ஜூன் 7-ம் தேதி நான் பதவி விலகிவிடுவேன்.

அதன் பின்னர் அடுத்த ஒரு வாரத்திலேயே புதிய தலைவருக்கான தேர்தல் பணி தொடங்கிவிடும்” என அறிவித்துள்ளார்.  அதிகாரப்பூர்வமாகப் பதவி விலகிய பின்னர் காபந்து பிரதமாரக மட்டுமே தெரேசா மே இருப்பார்.

அடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு அடுத்த சில வாரங்களில் விடை தெரிந்துவிடும் என்று கூறி உள்ளர்.