பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ரையன் டென்னஹி வயது மூப்பு காரணமாக மறைவு…!

‘ராம்போ: ஃபர்ஸ்ட் ப்ளட்’, ‘டாம்மி பாய்’, ‘டூ கேட்ச் எ கில்லர்’, உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் ப்ரையன் டென்னஹி மரணமடைந்தார். அவருக்கு வயது 81.

வயது மூப்பு காரணமாக நியூ ஹேவன் நகரில் உள்ள தனது வீட்டில் ப்ரையன் டென்னஹி மரணமடைந்தார். இதை அவரது மகளும் நடிகையுமான எலிசபெத் டென்னஹி உறுதிப்படுத்தியுள்ளார்.

ப்ரையன் டென்னஹி மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.