சிபிஐ லஞ்சஊழல் விவகாரம்: சிபிஐ அதிகாரிகள் 13 பேர் அதிரடி இடமாற்றம்

டில்லி:

ஸ்தானாவுக்கு எதிரான புகார் குறிதது விசாரணை நடத்தி வந்த டிஐஜி எம்.கே.சின்ஹா உட்பட 13 சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்தியப் புலனாய்வுத் துறையில் உள்ள இயக்குனருர், அலோக் வெர்மா, சிறப்பு இயக்குநரான ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே லஞ்சம் வாங்கியதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். இதன் காரணமாக நாட்டின் உயரிய புலனாய்வு மீதான நம்பிக்கையை இழந்தது.

இந்த நிலையில், சிபிஐன் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவ் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், 13 சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளனர்.

சி.பி.ஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கை விசாரித்து வந்தார், டி.ஐ.ஜி எம்.கே.சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. அலோக் வர்மாவின் உதவியாளரான எஸ்.ஜே. அஜய் பாஸ்ஸி, ராகேஷ் ஆஸ்தானா லஞ்ச ஊழல் வழக்கில் விசாரணை அதிகாரி போர்ட் பிளேயருக்கு  மாற்றப்பட்டு உள்ளார்.

சிபிஐ இயக்குனர்களியே  ஏற்பட்ட மோதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சிபிஐ சிறப்பு இயக்குனர் அஸ்தானாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட துணை எஸ்.பி.தேவேந்திரகுமார் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா  ஆகியோர்  கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ள நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் மதிப்பு மிக்க அமைப்பாக கருத்தப்பட்ட சிபிஐ-யிலேயே லஞ்ச லாவண்யம் புரையோடி இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.