லஞ்சப்புகார் எதிரொலி: தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் அதிரடி ரெய்டு

சென்னை:

ரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊரியர்கள் லஞ்சம் வாங்குவதாக ஏராளமான புகார்கள் குவிந்த நிலையில், சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ மனைகளில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கப்படுகிறது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும், மருத்துமனைகளுக்கு உபகரணங்கள் வாங்கியதிலும் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறித்தும்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவப் பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடலுர் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள மகப்பேறு மருத்துவப் பிரிவு மற்றும் எக்ஸ்ரே பிரிவில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் தலைமைஅரசு மருத்துவமணையில் குழந்தைகள் மற்றும் மகப்பேறு நலப்பிரிவில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சத்தியசீலன் தலைமையில் மூன்று இன்ஸ்பெட்டர் உட்பட 12 பேர் அதிரடிசோதனை நடத்தி வருகின்றனர்.

அங்குள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு, காய்ச்சல் பிரிவு பிணக்கூறாய்வு அறை உள்ளிட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3 பேர் சிக்கியதாகவும் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் சத்யசீலன் தலைமையில் 5 ஆய்வாளர்கள் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வார்டு வார்டாக சோதனை நடத்தி வருகின்றனர்.