லஞ்சம்: காஞ்சிபுரம், கடலூர் நகராட்சி ஆணையர்கள் பணியிடை நீக்கம்

சென்னை:

ஞ்ச புகார் காரணமாக  காஞ்சிபுரம் பெருநகராட்சி கமிஷனர் மற்றும் கடலூர் நகராட்சி கமிஷனர் ஆகியோர் அதிரடியாக பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது அதிகாரிகள் மட்டத்தில் கலக்கத்தை  ஏற்படுத்தி உள்ளது.

தற்போது காஞ்சிபுரம் கமிஷனராக இருக்கும் சர்தார் கடந்த 2016ம் ஆண்டு ஊட்டி நகராட்சி கமிஷன ராக இருந்தபோது, வாரிசு அடிப்படையில் வேலை வழங்கக்கோரிய விண்ணப்பத்தின்படி, வேலை வழங்க  ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்பட்டது. இதில் சர்தாருக்கு உதவியாக அதே அலுவலகத்தில் இருந்த பார்வதி என்பவரும் செயல்பட்டதாக கூறப்பட்டது.

இதுகுறித்த புகாரின் பேரில் இருவரும் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். சர்த்தார் காஞ்சீபுரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பார்வதி, கூடலூர் நகராட்சிக்கு 2-ம் நிலை கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

இந்த புகார் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை நடைபெற்றது. அப்போது,  ஏராளமான பணம் மற்றும் ஆவனங்கள் கைப்பற்றப்பட்டன. அதையடுத்து, அவர்களின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும் வகையில்,  இருவரையும் பணியிடை நீக்கி அரசு உத்தரவிட்டு உள்ளது.

அதைத்தொடர்ந்து காஞ்சீபுரம் நகராட்சி கமிஷனர் பொறுப்புக்கு, செயற்பொறியாளர் மகேந்திரன் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

ஒரே நாளில் இரண்டு அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அதிகாரிகள் மட்டத்தில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது.