லஞ்சம்: நத்தம்மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவு!

சென்னை,

முன்னாள் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மீது லஞ்சம் பெற்றதாக  வழக்கு பதிவு செய்ய கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக ஓபிஎஸ் அணி அதிர்ச்சி அடைந்துள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நத்தம் விஸ்வநாதன் மின்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது, தமிழக மின்சார தேவைக்காக,  சூரிய சக்தி மின்சார கொள் முதலில் முறைகேடு செய்ததாக கூறப்பட்டது. சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அனுமதி வாங்கித்தர 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் கூறப்பட்டது.

அதைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருந்து அவர் தூக்கி வீசப்பட்டு, கட்சியில் இருந்தும் ஒதுங்கி இருக்க ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.

இந்த லஞ்ச வழக்கில், அவர்மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த திருச்சி குற்றவியல் நீதிமன்றம, நத்தம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு அரசுக்கு  உத்தரவிட்டுள்ளது.

இதன் காரணமாக ஓபிஎஸ் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.