ஷியாமின்

ன்று ஐந்து நாடுகள் கலந்துக் கொள்ளும் பிரிக்ஸ் மாநாட்டில் பாக் தீவிரவாதிகள் அமைப்பு உட்பட பல தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று சீனாவின் ஷியாமின் நகரில் பிரிட்டன், இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா கலந்துக் கொள்ளும் பிரிக்ஸ் மாநாடு நடைபெற்று வருகிறது.  இந்த மாநாட்டில் தாலிபான், ஐஎஸ்ஐஎஸ், அல் கொய்தா போன்ற பல தீவிரவாத அமைப்புகளுக்கும், பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்த அமைப்புகளுக்கு வரும் நிதியுதவியை உடனடியாக தடை செய்ய வேண்டியது அவசியம் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது

பாகிஸ்தானுக்கு சீனா ஆதரவு தெரிவித்து வரும் இவ்வேளையில் இந்த தீர்மானத்தில் பாக் தீவிரவாத அமைப்புக்களையும் சேர்த்திருப்பது உலக நாடுகள் இடையே ஆச்சரியத்தையும்,  இந்தியா மற்றும் அதன் தோழமை நாடுகளிடையே மகிழ்வையும் உண்டாக்கி உள்ளது.  இந்தியா – சீனா பிரச்னைகள் குறித்து சீன அதிபருடன் இந்தியப் பிரதமர் மோடி நாளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவார் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.