ஷியாமின்

சீன நாட்டில் ஷியாமின் நகரில் இன்று துவங்கிய மாநாட்டில் இந்தியா சீனா உட்பட ஐந்து நாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொள்கின்றனர்.

பிரிக்ஸ் அமைப்பு, பிரேசில், ரஷ்யா, இந்தியா, சினா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமப்பாகும்.   இந்த அமைப்பின் 9 ஆவது மாநாடு இன்று சீனா நாட்டின் ஷியாமின் நகரில் துவங்கி உள்ளது.  இதன் 8 ஆவது மாநாடு இந்தியாவில் கோவாவில் சென்ற வருடம் நடந்தது.

மாநாடு நடந்த இடத்துக்கு மூன்றாவதாக மோடி சென்றுள்ளார்.  அனைவரையும் சீனப் அதிபர் ஜி ஜிங்பிங் வரவேற்றுள்ளார்.  மாநாடு துவங்கும் முன் ஐந்து நாடுகளின் தலைவர்கள் ஒரு குரூப் ஃபோட்டோ எடுத்துக் கொண்டனர்.   அப்போது சீனப் பிரதமர் மோடியை கைகுலுக்கி வரவேற்றார்.

நாளை மோடி, சீன அதிபரை சந்தித்து இந்திய – சீனா பிரச்னைகள் குறித்து பேச உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.