மகளின் திருமணத்துக்காக சேர்த்த பணம் செல்லாது: அதிர்ச்சியில் தந்தை மரணம்

பீகார் மாநிலம் கைமுர் என்னுமிடத்தில் தன் மகளின் திருமணத்துக்கென்று வரதட்சணையாக கொடுக்க சிறிது சிறிதாக சேர்த்த 35 ஆயிரம் ரூபாய் செல்லாது என தெரிந்ததால் அதிர்ச்சியில் பெண்ணின் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

ramsah

ராம் ஆவாத் சாஹ் என்ற 45 வயது நபருக்கு 4 மகள்கள். அதில் தனது மூத்த மகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கதில் திருமணம் ஏற்ப்பாடு செய்திருந்தார். தனது மகளின் திருமணத்துக்காக அவர் சேர்ந்து வைத்திருந்த 35,000 பணத்தையும் அவர் 500 மற்றும் 1000 நோட்டுக்களாக வைத்திருந்தார். அந்த பணத்தை நவம்பர் 12-ஆம் தேதி நடக்கவிருந்த திலக் என்ற நிச்சயதார்த்த விழாவில் மணமகனின் வீட்டாரிடம் கொடுப்பதாக இருந்தது.

இந்நிலையில் 500, 1000 நோடுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை கேட்டு அதிர்ச்சியடைந்த அவருக்கு தனது மகளின் திருமணம் நின்றுவிடுமோ என்ற பயத்தில் பக்கவாதம் ஏற்ப்பட்டது. அவரை உறவினர்கள் உடனடியாக வாரணாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவே அங்கும் அவர்களுக்கு ரூபாய் நோட்டு சிக்கல் ஏற்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் 500, 1000 நோட்டுக்களை வாங்க மறுத்து அவருக்கு சிகிச்சையளிக்க மறுக்கவே அங்கு ராம் ஆவாத் சாஹ் பரிதாபமாக மரணமடைந்தார்.

சாஹ் ஒரு சின்ன பெட்டிக்கடை வைத்து தன் மனைவி பிள்ளைகளுடன் பிழைத்துவருகிறார், அவருக்கு நான்கு பெண்கள் உட்பட ஆறு பிள்ளைகள் உள்ளனர். தனது தந்தையை இழந்த அந்த குடும்பம் மீளாதுயரில் ஆழ்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.