இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து 11 பேர் பலி

ரோம்:

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்து 11 பேர் பலியாயினர்.

இத்தாலி ஜெனோவோ நகரில் ஆற்றுப் பாலம் ஒன்று இன்று திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் வாகனங்களும் சிக்கிக் கொண்டன. தகவலறிந்த மீட்பு குழுவினர் விரைந்து சென்று மீட்டு பணிகளை மேற்கொண்டனர்.

இதில் 11 பேர் உயிரிழந்து உள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள வாகனங்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

இதில் யாரேனும் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.