திரைப்பட இயக்குநராகிறார் நடன இயக்குநர் பிருந்தா….!

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து திரையுலகிலும் முக்கியமான நடன இயக்குநராக வலம் வருபவர் பிருந்தா.

நடன இயக்குநர் பிருந்தா ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார்.

இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடக்கம் இன்று (மார்ச் 12) சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மணிரத்னம், கே.பாக்யராஜ் இருவரும் முதல் காட்சியை இயக்க, குஷ்பு மற்றும் சுஹாசினி இருவரும் க்ளாப் அடித்துத் தொடங்கி வைத்தார்கள்.

ஒளிப்பதிவாளராக பிரீத்தா ஜெயராமன், இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா, எடிட்டராக ராதா ஸ்ரீதர் மற்றும் கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.