தேர்தல் ஆணைய அனைத்துக்கட்சி கூட்டம்: வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர காங்கிரஸ் வற்புறுத்தல்

டில்லி:

2019ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் குறித்து அனைத்துக்கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று விவாதித்து வருகிறது. இதில், மீண்டும் வாக்குச்சிட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி உள்ளது.

தேர்தல் ஆணையம் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று  நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க  நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 7 தேசியக் கட்சிகள் மற்றும் 51 மாநிலக் கட்சிகளுக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

.அதன்படி இன்று அனைத்து கட்சியியுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தகூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர்,  வாக்குச்சீட்டு முறையில் அடுத்த மக்களவை தேர்தலை நடத்த வேண்டும் என்று  காங்கிரஸ் மீண்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து oல்லியில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த  ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள், 51 மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் தேர்தல் கமிஷன் அனைத்துக்கட்சிகளு டனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சி,  வாக்குச்சீட்டு முறையில் அடுத்த மக்களவை தேர்தலை நடத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.


டுத்த ஆண்டு கோடை விடுமுறை காலமான  ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து  அரசியல் கட்சிகளின் கருத்துகளை அறியவும், தேர்தல் குறித்து ஆலோசிக்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது.  கூட்டததில்,  ஜனநாயக அமைப்பை பலப்படுத்த அனைத்துக் கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகவும், தேர்தலில் பெண் வேட்பாளர்களை அதிக அளவில் அரசியல் கட்சிகள் நிறுத்துவதற்கான ஆலோசனையும் மேற்கொள்ளப்படும் மற்றும் ,  தேர்தல் செலவினங்கள், ஒழுங்குமுறைகள், போன்றவை குறித்தும் இந்த  கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும்,  வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரம் முன்பாக அனைத்து வகை பிரச்சாரங்களும் நிறுத்துவது குறித்தும், தேர்தல் பிரசாரம் மற்றும் கருத்துக்கணிப்பு தொடர்பாக   மின்னணு ஊடகங்கள் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிப்பது,  தேர்தல் நாளில் அரசியல் விளம்பரங்களுக்கும் தடை விதிப்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்க இருப்பதாக கூறியிருந்தது.

அதன்படி இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு முறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக நாடு முழுவதும் காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.