பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதி மற்றும் நான்காவது டெஸ்ட்டில், தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

துவக்க வீரர் ரோகித் ஷர்மா 44 ரன்களுக்கு அவுட்டானார். முன்னதாக, ஷப்மன் கில் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தற்போது, புஜாராவும், கேப்டன் ரஹானேவும் களத்தில் உள்ளனர்.

வெறும் 4 புதிய பெளலர்களைக் கொண்ட இந்திய பந்துவீச்சுப் படை, மனம் தளராமல் போராடி, ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸை 369 ரன்களுக்கு கட்டுப்படுத்தியுள்ளது.

எனவே, ஓரளவுக்கு அனுபவம் கொண்ட பேட்ஸ்மென்களுக்கு பொறுப்பு பெரியளவில் கூடியுள்ளது. இந்திய பேட்ஸ்மென்கள் யாரேனும் இருவர், கட்டாயம் பெரிய இன்னிங்ஸ் ஆடியே தீர வேண்டியுள்ளது.

இந்திய ஸ்கோர் 300ஐ தாண்டியாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சாதிப்பார்களா இந்திய பேட்ஸ்மென்கள்?